பகீர் வீடியோ!! எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிபத்து!! பயணிகள் அலறி அடித்து இறங்கி ஓட்டம்!!

 
எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ

ஜூன் 2ம் தேதி ஒடிசாவில் பாலசோர் மாவட்டத்தில்  3 ரயில்கள் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் 280க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 1000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.இந்தியா முழுவதையும் உலுக்கிய இந்த ரயில் விபத்தை அடுத்து தொடர்ந்து பல்வேறு ரயில் தடங்களில் விபத்துக்கள் ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது. இதனையடுத்து இந்தியா முழுவதும் அனைத்து வழித்தடங்களிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.  தற்போது ஹவுராவில் இருந்து செகந்திராபாத் சென்று கொண்டிருந்த ஃபலக்னுமா எக்ஸ்பிரஸிஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


 


இந்த ரயிலில் S4, S5, S6, CH ஆகிய 3 பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டதால் பயணிகள் அலறி அடித்து  தள்ளி கொண்டு கீழே இறங்கினர். இந்த விபத்தில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு போராடி தீயை அணைத்து வருகின்றனர்.  இந்த விபத்தில் ஃபலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகள் தீயில் கருகின. இந்த ரயிலில் சுமார் 1500 பயணிகள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இந்த விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் இதுவரை ஏற்படவில்லை. விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ


உரிய நேரத்தில் தீ விபத்து கண்டறியப்பட்டு பயணிகள் கீழே இறங்கியதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.  எனினும் தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.  தீப்பிடித்து எரிந்த பெட்டிகளுக்கும் மற்ற பெட்டிகளுக்கும் இடையே இருந்த இணைப்பு அகற்றப்பட்டது. இதன் காரணமாக மற்ற பெட்டிகளுக்கு தீ பரவாமல் தவிர்க்கப்பட்டது. ரயிலில் சார்ஜ் செய்யும் இடத்தில் பயணி ஒருவர் சிகரெட்டை புகைத்து கொண்டிருந்ததாகவும் , அதனால்  தீ விபத்து ஏற்பட்டதாகவும் அதே ரயிலில் பயணித்த பயணி ஒருவர் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளார்.   ஒடிசா ரயில் விபத்துக்கு பிறகு, சரக்கு ரயில் தடம் புரள்வது என தொடர்  ரயில் விபத்து சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web