ஜூலை 1 முதல் எக்ஸ்பிரஸ் ரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு? ... இந்தியன் ரயில்வே திடீர் முடிவு!

இந்தியன் ரயில்வே ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு 2 பைசாவும், சாதாரண வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு 1 பைசாவும் உயர்த்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு ஜூலை 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இந்த முடிவு, ரயில்வேயின் செயல்பாட்டு செலவுகளை சமாளிக்கவும், சேவைகளை மேம்படுத்தவும் எடுக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், புறநகர் ரயில்கள் மற்றும் 500 கிலோமீட்டருக்கு குறைவான தொலைவு பயணங்களுக்கு 2 ம் வகுப்பு டிக்கெட்டுகளுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே அமைச்சகம் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.
ஆனால், இந்த கட்டண உயர்வு குறித்து பயணிகள் மத்தியில் விவாதங்கள் தொடங்கியுள்ளன. புறநகர் மற்றும் குறுகிய தூர பயணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பது நிவாரணமாக இருந்தாலும், நீண்ட தூர ஏசி வகுப்பு பயணிகளுக்கு இது கூடுதல் சுமையாக அமையலாம்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!