எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம்!

 
ரயில் பயணிகள் கவனத்திற்கு.. இன்று இந்த ரயில்கள் ரத்து!!.. ரயில் பயணிகள் கவனத்திற்கு.. இன்று இந்த ரயில்கள் ரத்து!!..
 

சேலம் கோட்டத்தில் ரயில்வே பொறியியல் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், சில எக்ஸ்பிரஸ் ரயில்களின் இயக்கத்தில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த பணிகள் காரணமாக குறிப்பிட்ட நாட்களில் சில ரயில்கள் வழிமாற்றம் செய்யப்பட்டு இயக்கப்பட உள்ளன.

ரயில் எக்ஸ்பிரஸ்

இதன்படி, பிலாஸ்பூர்–எர்ணாகுளம் வாராந்திர எக்ஸ்பிரஸ், எழும்பூர்–மங்களூர் எக்ஸ்பிரஸ், திப்ரூகர்–கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் மற்றும் ஆலப்புழா–தன்பாத் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் கோவை ரயில் நிலையத்தில் நிற்காமல், இருகூர்–போத்தனூர் வழியாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவை, பீளமேடு, கோவை வடக்கு உள்ளிட்ட நிலையங்களில் பயணிகள் ஏறும், இறங்கும் வசதி இருக்காது.

 சிறப்பு ரயில்

பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர், வழக்கமான பாதையில் ரயில்கள் இயக்கப்படும் என்றும், பயணிகள் பயணத்திற்கு முன் ரயில்வே அறிவிப்புகளை கவனித்து திட்டமிட வேண்டும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த தற்காலிக மாற்றங்கள் சில நாட்களுக்கு மட்டுமே நடைமுறையில் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!