சிக்னல் கோளாறு... ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் ... பயணிகள் கடும் அவதி!

தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் சிக்னல் கோளாறு ஏற்பட்டதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனையடுத்து தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதன்படி விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே சிக்னல் கோளாறு ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ராமேஸ்வரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி விரைவு ரயில்கள், புதுச்சேரி-எழும்பூர் பயணிகள் ரயில்கள் வருகையில் சுமார் 1 மணிநேரம் தாமதம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் நெல்லை, முத்துநகர் உட்பட பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்னைக்கு தாமதமாக செல்கின்றன. ரயில்கள் வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!