ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு நீட்டிப்பு! அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு!

 
மின் அட்டை ஆதார்

தமிழகத்தில் மின் நுகர்வோர்கள், தங்களது மின் இணைப்பு எண்ணுடன் வீட்டு உரிமையாளரோ அல்லது வாடகைக்கு குடியிருப்பவரோ அவர்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதற்கான கடைசி தேதி ஒரு முறை நீட்டிக்கப்பட்டது. பின்னர் இம்மாதம் ஜனவரி 31ம் தேதி (இன்று) இதற்கான இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன.

இந்நிலையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி தேதியை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் படி, பிப்ரவரி மாதம் 15ம் தேதி வரை கடைசி தேதியாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம், 500 யூனிட் மானிய விலையிலான மின்சாரத்தைப் பயன்படுத்தும் மின் நுகர்வோர் 2.67 கோடி பேர் உள்ளனர். இலவசம், மானியம் பெறும் பயனாளிகளின் விவரங்களை ஆதார் எண்ணுடன் இணைக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

eb_office

இதையடுத்து, நுகர்வோரின் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை கடந்த ஆண்டு நவம்பவர் 15ம் தேதி தமிழக மின் வாரியம் தொடங்கியது. இதற்கான கடைசி நாளாக கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி என தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலான மின் நுகர்வோர், தங்களது ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்காததால், இதற்கான காலக்கெடுவை ஜனவரி 31ம் தேதி வரை நீட்டித்து மின் வாரியம் உத்தரவிட்டது. தற்போது கடைசி தேதி பிப்ரவரி 15ம் தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகம் முழுவதும் 2,811 மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டன. நேற்று வரை 2.34 கோடி மின் நுகர்வோர், தங்களது ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைத்துள்ளனர். இந்நிலையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலஅவகாசம் இன்றுடன் (ஜன. 31) நிறைவடைகிறது. இந்த காலஅவகாசம் மேலும் நீட்டிக்கப்படாது என்று மின் வாரியம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

eb_office

இதனால் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் கவுன்டர்களில் இன்று கூட்டம் அதிகளவில் காணப்பட்டதால், தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.  மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காத நுகர்வோர், மின் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். இதனால், மின் பயன்பாடு கணக்கெடுத்த 20 நாட்களுக்குள் மின் கட்டணம் செலுத்த முடியாததுடன், அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். மின் இணைப்பு துண்டிக்கவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்!

From around the web