சென்னையில் நாய்–பூனை செல்லப்பிராணி உரிமம் பெற அவகாசம் நீட்டிப்பு!

 
நாய் பூனை
 

பெருநகர சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணி வளர்ப்பு விதிமுறைகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில், கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் முதல் ஆன்லைன் வழியாக உரிமம் பெறும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. பின்னர் உரிமம் பெறுதல் மேலும் எளிமையாக்க, மேம்படுத்தப்பட்ட ஆன்லைன் போர்டல் கடந்த நவம்பர் 3ஆம் தேதி மேயரால் திறந்து வைக்கப்பட்டது. இதன் மூலம் நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளை வீடுகளில் வளர்ப்போர் இணையதளத்தின் வாயிலாகவே நேரடியாக உரிமம் பெற்று வருகின்றனர்.

சமீபத்திய அறிவிப்பில், இந்த செல்லப்பிராணி உரிமப் பதிவு செய்யும் கடைசி தேதி அடுத்த மாதம் 7ஆம் தேதி வரை நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுவரை உரிமம் பெறாதவர்கள் இந்த அவகாசத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆன்லைன் போர்டல் மூலமாக ஆவணங்களை பதிவேற்றி, சில நிமிடங்களில் உரிமம் பெறும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி ஏற்கனவே உரிமம் பெறாமல் செல்லப்பிராணிகள் வளர்ப்போருக்கு ₹5,000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. அதனால், செல்லப்பிராணி உரிமையாளர்கள் இந்நேரத்தை பயன்படுத்தி பதிவு செய்துவிடவேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!