வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இஸ்ரேல் பயணம்; பிரதமர் நெதன்யாகுவுடன் சந்திப்பு!

 
ஜெய்சங்கர் நெதன்யாகு

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இரண்டு நாட்கள் அரசு முறைப் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார். இந்தப் பயணத்தின் போது இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு முக்கியத் தலைவர்களை அவர் சந்தித்துப் பேசினார்.

ஜெய்சங்கர்

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு: அமைச்சர் ஜெய்சங்கர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்தித்துப் பேசினார். இந்த ஆலோசனையின் போது பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. தலைநகர் ஜெருசலேமில் இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கை அமைச்சர் சந்தித்தார்.

நெதன்யாகு

மேலும், இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் கில்டான் சார் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர் பர்கட் ஆகியோரையும் சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது மற்றொரு முக்கியத் தகவலும் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அடுத்த ஆண்டு (2026) தொடக்கத்தில் இந்தியா வர உள்ளதாகத் தெரிகிறது. அப்போது அவர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து முக்கிய ஒப்பந்தங்கள் மற்றும் உறவுகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!