உஷார்... ஆப்பிள் சாதனங்களில் உச்ச கட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல்.. CERT-In எச்சரிக்கை!

 
ஆப்பிள்
 

இந்தியக் கணினி அவசர பதிலளிப்பு குழு (CERT-In) ஆப்பிள் சாதனங்களில் தீவிரமான பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிந்துள்ளதாக அறிவித்துள்ளது. ஐபோன், ஐபேட் உள்ளிட்ட சாதனங்களில் ஹேக்கர்கள் ஊடுருவி, பயனர்களின் முக்கிய தரவுகளை திருடும் வாய்ப்பு உள்ளது. அதனால் பயனர்கள் உடனடியாக சாதனங்களை புதுப்பிக்க வேண்டியது அவசியம் என CERT-In தெரிவித்துள்ளது.

இந்த குறைபாடுகள் ஹேக்கர்களால் பல தீவிர விளைவுகளை ஏற்படுத்தலாம்.
Arbitrary Code Execution: சாதனத்தில் விரும்பிய குறியீடுகளை இயக்க முடியும்.
Sensitive Data Access: பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை அணுக முடியும்.
Security Bypass: பாதுகாப்புக் கட்டுப்பாடுகளைத் தாண்டிச் செல்லலாம்.
DoS Attacks: சாதன செயல்பாட்டை குலைக்க சேவை மறுப்பு தாக்குதல்களை நடத்த முடியும்.

CERT-In அறிக்கையின் படி, இந்த குறைபாடுகள் Kernel, WebKit, CoreAnimation, Siri போன்ற முக்கிய அமைப்புக் கூறுகளில் உள்ளன.
பயனர்கள் உடனடியாக புதுப்பிக்க வேண்டிய பதிப்புகள்:
 iOS மற்றும் iPadOS 26.1 க்கு முந்தைய பதிப்புகள்
watchOS 11.1 க்கு முந்தைய பதிப்புகள்
tvOS 18.1 க்கு முந்தைய பதிப்புகள்
visionOS 2.1 க்கு முந்தைய பதிப்புகள்
 Safari 17.6.1, Xcode 15.4, macOS Sequoia 15.1, Ventura 13.7.1, Monterey 12.7.2

ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய பதிப்புகள் (iOS 26.1 மற்றும் பிற) இந்த குறைபாடுகளை சரிசெய்யும் பாதுகாப்புப் பிணைப்புகளைக் கொண்டுள்ளன.

CERT-In, உடனடியாக புதுப்பிப்பதை தவிர, பயனர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு பரிந்துரைகளை வழங்கியுள்ளது:
தானியங்கி அப்டேட்களை இயக்கவும்
அங்கீகரிக்கப்பட்ட மற்றும் நம்பகமான மூலங்களில் இருந்து செயலிகளை மட்டுமே பதிவிறக்கம் செய்யவும்
சந்தேகமுள்ள இணைப்புகளை கிளிக் செய்யாமல் இருக்கவும்
இந்த எளிய நடவடிக்கைகள் உங்கள் ஆப்பிள் சாதனங்களை சைபர் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க உதவும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!