முகநூல் பக்கம் முடக்கம்... உலகம் முழுவதும் பயனர்கள் கடும் அவதி!
உலகம் பல பகுதிகளில் சமூக வலைத்தள முகநூல் பக்கம் செவ்வாய்க்கிழமை முதல் முடங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மெட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த வலைத்தளத்தில் லட்சக்கணக்கான பயனர்கள் புகார்கள் பதிவு செய்துள்ளனர்.

பல பயனர்கள் தங்கள் கணினிகளில் முகநூல் பக்கம் வேலை செய்யவில்லை என்று தெரிவித்து ஸ்க்ரீன்ஷாட் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். இதனால், உலகம் முழுவதும் இதே பிரச்சனை ஏற்பட்டுள்ளதா அல்லது தனிப்பட்ட கணினி பிரச்சனைதான் என்று பயனர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சிலர் பாகிஸ்தானில் இருப்பதாகவும், அங்கு முகநூல் பக்கம் முடங்கியதா என்றும் சந்தேகம் காட்டியுள்ளனர். மற்றவர்கள், சிலர் லாக்-இன் செய்தபோதும் பக்கம் இல்லை என்றும், சிலர் செல்போனில் இயங்குகிறது என்றும் கூறியுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
