சினிமா நட்சத்திரங்களை வைத்து இன்னிசை கச்சேரி... லட்ச கணக்கில் மோசடி செய்த கும்பல்!

 
இசை நிகழ்ச்சி

சமூக வலைதளங்கள் மட்டும் தான் எல்லாமே.. என ஒரு கூட்டம் சுற்றிக்கொண்டிருக்கிறது. ஆனால் அவர்களுக்கு தான் ஆபத்தும் நிறைந்துள்ளது. உடல், மனநிலை தொடர்பான பாதிப்புகள் ஒருபக்கம் என்றால், ஏமாற்றம், பணத்தை பறி கொடுத்தல் போன்ற பரிதாபங்களும் அவர்களுக்கு நேரிடுகிறது. அப்படி ஒரு கதை தான் இது.

நீலகிரி மாவட்டம் உதகையில் இசை நிகழ்ச்சி நடத்துவதாக ஒரு கும்பல் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதில் பெரும் நட்சத்திரங்களும் பங்கேற்க உள்ளதாக குறிப்பிட்டிருந்தனர். இதற்காக ஆன்லைனில் 2,000 டிக்கெட்டுகளை விற்றுள்ளனர். இளைஞர்கள் பலரும் அவசர அவசரமாக டிக்கெட்களை பதிவுசெய்தனர். 

இசை நிகழ்ச்சி

உதகையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் தனியார் திருமணமண்டபத்தில் இசை நிகழ்ச்சி நடத்துவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதன் பிறகு தான் தெரிந்தது அனைத்தும் மோசடி என்று. பணம் செலுத்தி முன்பதிவு செய்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதிகபட்சம் ஆன்லைனில் முன்பதிவு செய்யும்போது ஒருமுறை முழுமையாக ஆராய்ந்திருக்கலாம். 

இசை நிகழ்ச்சி

அந்த வகையில், மோசடி கும்பல் 2,000 டிக்கெட்களை ரூ.10 லட்சத்துக்கு விற்றனர். விசாரணையில், இந்த நிகழ்ச்சி போலியானது மேலும் ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக தெரியவந்ததது. மேலும், இந்த மோசடியில் ஈடுபட்ட சரவணன், சித்தார்த், ஜாக்சன், மோனிஷ்குமார் ஆகிய இளைஞர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களது கார், இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web