கள்ளக்காதல்... மனைவியின் தலையை அரிவாளால் துண்டித்து வாசலில் வைத்த கணவன்!
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பெரியகுளம் தெருவில் வசித்து வருபவர் 26 வயது அஜித் . இவர் தன்னுடைய மனைவி சுதாவுடன் குடும்பமாக வசித்து வந்தார். இவர்களுக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் 6 மற்றும் 2 வயதுடைய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சுதாவுக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவத்தன்று இரவு வேலை முடித்து வீட்டிற்கு வந்த அஜித், மனைவி வீட்டில் இல்லாததை கவனித்து தேடி சென்றுள்ளார். அப்போது அவர் அருகிலுள்ள வீட்டிலிருந்து வெளியே வருவதைக் கண்டதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட கோபத்தில் அஜித் சுதாவை தாக்கியதாக கூறப்படுகிறது.

பின்னர் வீட்டிற்குள் அழைத்துச் சென்று தாக்கியதில் சுதா உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பினர். இந்த சம்பவத்தில் அஜித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
