அரசாங்க சலுகை, ரொக்கப் பணத்துக்காக இளம்பெண் போலி திருமணம் ஏற்பாடு!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹசன்பூரில் 300க்கும் மேற்பட்ட மணமக்களுக்கு திருமணம் செய்துவைக்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் தயாரான நிலையில் இதில் அஸ்மாவும் கலந்துகொண்டார். அவர் தனது உறவினர் ஜாபர் அகமதுவை மணக்க முடிவு செய்திருந்தார்.
ஆனால், அஸ்மாவுக்கு ஏற்கெனவே திருமணமாகி இருந்தது. மேலும், அவர் தனது முதல் கணவரிடமிருந்து விவாகரத்து பெறாமலேயே 2வது திருமணம் செய்துகொள்ள முன்வந்துள்ளார். அஸ்மா, 3 ஆண்டுகளுக்கு முன்பு நூர் முகமதுவை என்பவரை திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்ததால், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கணவரை விட்டுப் பிரிந்து விட்டார். பெற்றோருடன் அஸ்மா வாழ்ந்து வந்த நிலையில் இவர்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில்தான் அஸ்மா, தனது உறவினரை மணக்க இருந்த நிலையில், இதுகுறித்த தகவலை அவரது மாமனார் அதிகாரிகளுக்கு தெரிவித்து அவரின் கல்யாணச் சான்றிதழையும் கொடுத்துள்ளார். அதன்பேரில், அவருடைய திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்திவிட்டனர்.
முதலமைச்சரின் கூட்டுத் திருமணத் திட்டத்தின்கீழ் மணமகளுக்கு ரூ.35,000 உட்பட இலவசப் பொருட்கள் வழங்கப்படும். அந்தப் பரிசுப் பொருட்களையும் பணத்தையும் பிரித்துக்கொள்ள அஸ்மாவும் அவரது உறவினரும் ஒப்பந்தம் செய்துகொண்டனர். அஸ்மா அரசாங்கம் தரும் அந்தப் பணத்தில் எருமை மாடுகள் வாங்க இருந்ததாகவும் கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!