அதிர வைக்கும் ஸ்கெட்ச்.... திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் பெயரில் மோசடி!
புதுச்சேரியில் காரைக்காலில் உலகப்பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனீ்ஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு வெளியூர், வெளிநாட்டு பக்தர்கள் எளிதாக சாமி தரிசனம் செய்யும் வகையில் கோவில் நிர்வாகம் பல ஆண்டுகளுக்கு முன் இணையதளத்தை உருவாக்கி அதில் முக்கிய பூஜைகள், தரிசனம் குறித்த விவரங்களை பதிவிட்டு வருகிறது. மேலும் அபிஷேகம், அர்ச்சனை இவைகளும் இணையதளத்தில் முன்பதிவு செய்யப்படுகிறது.

கோவிலுக்கு வர முடியாத பக்தர்களுக்கும் பூஜை செய்யப்பட்டு பிரசாதம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பக்தர்கள் சிலர் கோவில் இணையதளத்தில் பணம் செலுத்தி விட்டதாகவும், பிரசாதம் வரவில்லை எனவும் கோவில் நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து காரைக்கால் சைபர் கிரைம் போலீசில் கோவில் நிர்வாக அலுவலர் அருணகிரிநாதன் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் ஆய்வு செய்ததில் கோவில் பெயரில் போலி இணையதளம் தொடங்கி பணம் வசூலிப்பது தெரியவந்தது. இதுகுறித்து கோவில் மேலாளர் சீனிவாசன், 'கோவில் அர்ச்சகரான வெங்கடேஸ்வர குருக்கள், பெங்களூருவில் வசித்து வரும் ஜனனி பரத் என்பவரும் சேர்ந்து கோவில் நிர்வாகம் பெயரில் போலியாக இணையதளத்தை உருவாக்கி உள்ளனர்.
அவர்கள் பக்தர்களிடம் பணத்தை பெற்று போலியாக பிரசாதம் அனுப்பி வைத்துள்ளனர். இதனால் கோவில் நிர்வாகத்தை ஏமாற்றியும், கோவிலுக்கு இழப்பை ஏற்படுத்தியும் உள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைத்தொடர்ந்து வெங்கடேஸ்வர அர்ச்சகர் மற்றும் பெங்களூருவை சேர்ந்த ஜனனி பரத் ஆகிய 2 பேரை திருநள்ளாறு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என கூறப்படுகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
