அதிர்ச்சி... வைக்கோலில் ஏறி இறங்கியதில் குபுகுபுவென பற்றி எரிந்த கார்!

 
காரில் தீ

வேலூர் மாவட்டம் காட்பாடி  மேல்வடுகுட்டை பகுதியில் வசித்து வருபவர் ஆரோக்கியம். இவர் தனது ஃபோல்க்ஸ்வேகன் போலோ காரில் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் திருமணம் முடிந்து மறு வீட்டுக்காக அவரது சம்மந்தி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது காட்பாடி அடுத்த தொண்டான்துளசி மோட்டூர் கானாரு பகுதியில் சாலையில் காய்ந்த நெல் புற்கள் போடப்பட்டிருந்தன.   

வைக்கோல்

இதன் மீது ஏறி இறங்கிய கார் வாகனத்தின் முன் கீழ் பகுதியில் நெல்புற்கள் சிக்கிக் கொண்டு இருந்தன. இஞ்சின் சூடாக இருந்ததால் அதில்  சிக்கிய புற்கள், திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.  உடனடியாக ஆரோக்கியம், கீழே இறங்கி பார்க்கும் பொழுது தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  கண்ணிமைக்கும் நேரத்திற்குள் தீ மள மளவென பற்றி வாகனம் முழுவதும் தீப்பற்றி எரியத் தொடங்கியது  

காரில் தீ
தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் அரை மணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதற்குள்  கார் முழுவதும் எரிந்து கருகி சாம்பலானது.   தீப்பிடித்ததும் காரில் இருந்த அனைவரும் கீழே இறங்கியதால் பெரும்உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் சாலையில் போடப்பட்ட காய்ந்த புற்களால் வாகனத்தின் கீழ் பகுதியில் உள்ள இஞ்சினில் சிக்கிக் கொண்டு தீப்பற்றி கார் எரிந்துள்ளதாக தெரிவித்தனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web