பகீர்... நூடுல்ஸ் செய்யாதீங்க... கேட்காததால் ஆயுதப்படை ஊழியர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

 
நூடுல்ஸ்

உத்திரப்பிரதேச மாநிலத்தில் சம்பா பூர்வா பகுதியில் வசித்து  வந்தவர் ராம் அவதார். இவருக்கு வயது 65.  இவர்  தனது வீட்டு குழந்தைகளுக்காக மேகி மற்றும் பாஸ்தா செய்து கொடுக்கும் போது வேண்டாம் என கூறினார். செய்தவர்களிடம் வேண்டாம் என கோரிக்கை விடுத்தார். நேற்றும் மே 1ம் தேதி  வியாழக்கிழமை இரவு வழக்கம் போல் குழந்தைகளுக்காக மேகி தயாரிக்கப்படுவதைக் கண்ட அவர், மனமுடைந்தார். இந்நிலையில் தனது அறைக்குச் சென்று தன்னிடம் இருந்த துப்பாக்கியால் தன்னை சுட்டுக்கொண்டார்.

நூடுல்ஸ்

ராம் அவதார், ஆயுதத் தொழிற்சாலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவருடைய மனைவி ஏற்கனவே காலமாகிவிட்ட நிலையில், அவர் தனது இரு மகன்கள், மருமகள்கள் மற்றும் பேரப்பிள்ளைகள் உடன் வாழ்ந்து வந்தார். குடும்பத்தில் தனது பேச்சுக்கு மதிப்பில்லை என மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். 

நூடுல்ஸ்

இதனையடுத்து அவர், தற்கொலைக்கு முயன்றதாக அவரது தம்பி தெரிவித்துள்ளார். மேகியின் வாசனை பிடிக்காததால் அவர் சமையலறையில் தயாரிக்க வேண்டாம் என்று பலமுறை கேட்டும், அதை குடும்பத்தினர் புறக்கணித்து வந்ததாக தெரிகிறது.  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், ராம் அவதார் பயன்படுத்திய துப்பாக்கி எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?