பகீர்... ரயிலில் இருந்து மனைவி, குழந்தையை தள்ளிவிட்டு கொலை செய்த கணவன்!

ஓடும் ரயிலில் இருந்து மனைவி, குழந்தையை தள்ளிவிட்டு கொலை செய்த கணவனுக்கு ஆயுள்தண்டணை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் எட்டாவாவில் சிவில் இன்ஜினியராக பணிபுரிந்து வருபவர் சந்தன் ராய் சவுத்ரி. இவரது மனைவி போராவி கங்குலி மற்றும் ஒரு வயது மகள் ஷாலினி. இவர்கள் இருவரையும் ரயிலில் தள்ளி கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டார். இந்த வழக்கில் அவரை குற்றவாளியாக கருதி நீதிமன்றம், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
2020ம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தில், சந்தன் ராய் தனது குடும்பத்துடன் மகத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது, பாஃபண்ட் ரயில் நிலையம் அருகே ஓடும் ரயிலிலிருந்தே மனைவியையும், தனது மகளையும் தள்ளி விட்டதால் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஆரம்பத்தில் இது விபத்தாகவே பதிவு செய்யப்பட்டிருந்தது. அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் பின்னர் இது திட்டமிட்ட கொலை என்பது தெரிய வந்தது.
அதன்படி சந்தன் ராய்க்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், அதனால்தான் தனது மனைவியைத் கொல்ல நினைத்ததாகவும் கூறினார். கொலை செய்த பிறகு மனைவியின் மொபைலை எடுத்து சாட்சியங்களை அழிக்க முயற்சித்தார். அதே சிம் கார்டை தன் மொபைலில் பயன்படுத்தியதால் அவரது செயல்கள் பதிவாகி, காவல்துறையால் டிஜிட்டல் ஆதாரங்கள் மூலம் உண்மை வெளிவந்து அவரை குற்றவாளியாக காட்டி கொடுத்ததது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி சுனிதா சர்மா, “இது வெறும் ஒரு கொலை அல்ல; இது மனித நேயத்தின் மீது விழுந்த ஒரு கறை,” எனக் கூறினார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது