பகீர்... ஆசிரியரை பழிவாங்க கழிப்பறையில் வெடிகுண்டு வைத்த பள்ளி மாணவர்கள்...மாட்டிக்கொண்ட சிறுமி!

சத்தீஸ்கர் மாநிலத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், 8 மற்றும் 9 ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தங்களின் வகுப்பு ஆசிரியை பழிவாங்க திட்டம் தீட்டினர். இதற்காக சோடியத்துடன் தண்ணீர் கலந்தால் வெடிக்கும் என்பதை சமூக வலைதளங்கள் மூலம் கண்டுகொண்டனர் . உடனே மாணவர்கள் அந்த முறையை பயன்படுத்தி ஆசிரியயை பழிவாங்க திட்டம் தீட்டி ஆன்லைனில் சோடியம் வாங்கியுள்ளார்.
தண்ணீர் பட்டதும் வெடிக்கும் வகையில் மாணவர்கள் கழிவறையில் சோடியமை வைத்து ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆனால் ஆசிரியை பழி வாங்க மாணவர்கள் செய்த சதி திட்டத்தில் 9 வயது சிறுமி சிக்கிவிட்டார். கழிவறையில் வெடி சத்தத்தையும் சிறுமியின் அலறல் சத்தத்தையும் கேட்ட பள்ளி ஊழியர்கள் கதவை உடைத்து சிறுமியை மீட்டனர். சிறுமியின் உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளியின் சிசிடிவி காட்சிகளை சோதனை செய்ததில் மாணவர்களின் தில்லுமுல்லுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இதையடுத்து குறிப்பிட்ட 4 மாணவர்களை கைது செய்து சிறுவர் சீர் திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ள மற்றொரு மாணவரை விரைவில் கைது செய்ய உள்ளதாகவும் காவல்துறை அறிவித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!