41 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியருடன் விண்ணில் சீறிப் பாய்ந்தது ‘ஃபால்கன் 9 ராக்கெட்’!

 
ஃபால்கன் 9


 இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 விண்வெளி வீரர்களுடன் ஃபால்கன்-9 ராக்கெட் பல தடைகளை தாண்டி விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது.  ஆக்சியம்-4 விண்கலம், புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள ஏவுதள வளாகம் 39A இலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம், இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 12:01 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

ஃபால்கன் 9
இந்த விண்கத்தில் இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா, போலாந்து வீரர் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி, ஹங்கேரி வீரர் திபோர் கபு மற்றும் அமெரிக்க வீரர் பெக்கி விட்சன் ஆகியோர் உள்ளனர். நாளை மாலை 4.30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தை அடையும். இதில் பயணம் செய்யும் குழுவினர் 14 நாட்கள் சுற்றுப்பாதை ஆய்வகத்தில் தங்கி, பல்வேறு அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்வர்.  
இது நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகியவற்றால் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மேற்கொள்ளப்படும் 4 வது தனியார் விண்வெளி வீரர்கள் பயணமாகும்.  சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) ஏற்கனவே ஏழு விண்வெளி வீரர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், ஆக்ஸியம்-4 திட்டத்தின் கீழ் இந்தியாவின் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு விண்வெளி வீரர்கள் இன்று சென்றுள்ளனர்.  இவர்கள்   ஆராய்ச்சி முடிந்ததும், இரண்டு வார கால இடைவெளிக்கு பிறகு பூமிக்குத் திரும்புவார்கள். இந்த பயணம் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கும் முக்கிய மைல்கல்லாக அமைகிறது. 

ஃபால்கன் 9
இந்திய விமானப்படையைச் சேர்ந்த குரூப் கேப்டனும், இஸ்ரோவின் விண்வெளி வீரருமாவார்.  இவர் தான்  இந்த பயணத்தின் பைலட் ஆவர். 1984-ல் ராகேஷ் ஷர்மா சோவியத் ஒன்றியத்தின் சோயுஸ் விண்கலத்தில் பயணம் செய்த பிறகு, 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு இந்தியர் விண்ணுக்கு செல்கிறார். இதன் மூலம், சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லும் முதல் இந்தியர் ஆவார்.  இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 வீரர்களை வீரர்களும் இந்தியா, போலந்து, மற்றும் ஹங்கரி ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி, 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நாடுகளின் மனித விண்வெளி பயணத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது