கோயிலுக்கு சென்ற குடும்பத்தினர்... திருச்சியில் கோர விபத்து... குழந்தை உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே மரணம்!

 
லாரி விபத்து

சேலத்தில் இருந்து கும்பகோணத்தில் உள்ள கோயிலுக்கு ஆம்னி வேனில் குடும்பத்தினரோடு சென்று கொண்டிருந்தவர்களின் கார் விறகு லோடு ஏற்றி வந்த லாரி மீது திருச்சி அருகே மோதிக் கொண்டு விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே சிறுமி உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  காரில் 9 பேர் பயணம் செய்த நிலையில்,  6 பேர் பலியானது பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் திருவாசி அருகே, சேலம் தேசிய நெடுஞ்சாலையில் விறகு லோடு ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக ஆம்னி கார் மோதி பெரும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியில் சிக்கிய கார் முழுவதுமாக  நசுங்கி சேதமடைந்தது. 

லாரி விபத்து

அதிகாலை நேரத்தில் நிகழ்ந்த இந்த கொடூர விபத்தில் காரில் பயணித்த சிறுமி உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இறந்தவர்களில் 4 ஆண்கள், ஒரு பெண், ஒரு குழந்தை என மொத்தம் 6 பேர். மேலும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இரண்டு பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்த 6 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  விபத்தில்  உயிரிழந்த 6 பேரும் சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்தவர்கள் என்பது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  சேலத்தில் இருந்து கும்பகோணத்தில் உள்ள கோயிலுக்கு குடும்பத்தோடு காரில் சென்றவர்கள் விபத்துக்குள்ளாகி இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web