பிரபல கவிஞர் புற்றுநோயால் காலமானார்.... முதல்வர் இரங்கல் ... !

 
ராணா

புகழ்பெற்ற கவிஞர் முனவ்வர் ராணா புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார்.அவருக்கு வயது 71.  கவிஞர் ராணா  லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ராணா  நீண்ட நாட்களாக தொண்டை புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவரது மகள் அவரது இறப்பை உறுதி செய்துள்ளார்.  


 


நவம்பர் 26, 1952ல், உத்தரபிரதேச மாநிலம்  ரேபரேலியில் பிறந்தவர்  ராணா. இவர்  சிறுவயது முதலே  கஜல்களில் ஆர்வம் கொண்டிருந்தார்.   உருது இலக்கியம் மற்றும் கவிதைகளில் பலரது பாராட்டை பெற்றவர்.  பாரசீக மற்றும் அரேபிய தாக்கங்களிலிருந்து விலகி, ஹிந்தி மற்றும் அவதி வெளிப்பாடுகளை உள்ளடக்கியவர்.  அவரது படைப்புகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.



அவரது வாழ்நாள்  முழுவதும், ராணா தனது கவிதைத் தொகுப்பான ‘ஷஹ்தபா’க்காக 2014ல்  சாகித்ய அகாடமி விருதை பெற்றவர்  என்பது குறிப்பிடத்தக்கது.  விருது பெற்ற ஒரு வருடம் கழித்து, நாட்டில் "அதிகரிக்கும் பிரச்சனை" குறித்த உண்டாகும் அச்சத்தை மேற்கோள் காட்டி, அந்த விருதைத் திருப்பித் தர முடிவு செய்தார். அவர் அமீர் குஸ்ரோ விருது, மிர் தாகி மிர் விருது, காலிப் விருது, டாக்டர் ஜாகிர் ஹுசைன் விருது மற்றும் சரஸ்வதி சமாஜ் விருதுகளையும்  பெற்றவர். இவரின்  மறைவுக்கு உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  இது குறித்து வெளியிட்ட பதிவில் சமாஜ்வாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஃபக்ருல் ஹசன் சந்த், முனவ்வர் ராணா இந்தியாவின் பெயரை மிக உயரத்திற்கு கொண்டு சென்றார். அவரது சோகமான மறைவுக்கு சமாஜ்வாடி கட்சி அவருக்கு அஞ்சலி செலுத்துகிறது. அவரது மறைவு நாட்டுக்கு மிகப்பெரிய இழப்பு எனக் குறிப்பிட்டுள்ளார்.  
 மேலும் அவர் கடினமான காலங்களில் சவால்களை எதிர்கொண்டு பிரதிபலித்த ஒரு சிறந்த ஆன்மா எனக் கூறி பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web