பிரபல நடிகரும், இயக்குநருமான சத்யா காலமானார்!! திரையுலகில் தொடரும் சோகம்!!

 
சத்யா

பிரபல நடிகரும், இயக்குநருமான டபோரி சத்யா  உடல் நலக்குறைவு காரணமாக  உயிரிழந்தார். இவருக்கு வயது 45. இவரது திடீர் மரணம் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவர் கடந்த சில நாட்களாக சிறுநீரக செயலிழப்பு காரணமாக பெங்களூரில் உள்ள பிஜிஎஸ் மருத்துவமனையில் சத்யா அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.சத்யாவுக்கு மனைவி, 3 மகள்கள். 

சத்யா
யோகியின் முன்னணி நடிகராக அறிமுகமானார். வில்லன் கதாபாத்திரங்களில் மட்டுமல்ல துணை கதாபாத்திரங்களிலும் அவரது நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது.  மிகச்சிறந்த நடிகர் மட்டுமல்ல மேளா படத்தை இயக்கி சிறந்த இயக்குநராகவும் தம்மை பதிவு செய்து கொண்டார்.  தற்போது இவரது உடல் அவரது இல்லத்தில்  பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.இன்று இறுதி சடங்குகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

சத்யா

இது குறித்து சத்யாவின் தாயார் ருகம்மா “சத்யா ஒரு வாரம் மருத்துவமனையில்  ஐசியூவில் இருந்தார்.ஆனாலும் திரைப்படங்கள் குறித்த தேடுதலுக்கு அப்போதும்  அர்ப்பணிப்புடன் இருந்தார். என்னையும் குடும்பத்தாரையும் பார்த்துக் கொள்வதாக சத்யா உறுதி அளித்திருந்தார்.  அவரது மறைவு எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது எனத் தெரிவித்துள்ளார். இவரது மறைவிற்கு பிரபலங்கள், திரைத்துறையினர், சக நண்பர்கள் , ரசிகர்கள், உறவினர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web