பிரபல நடிகரும், இயக்குனருமான தபோரி சத்யா காலமானார்.. !! ரசிகர்கள் அதிர்ச்சி !!

 
சத்யா சத்யா

திரையுலகில் அண்மைக்காலமாக அதிர்ச்சி அளிக்கும் நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. பிரபல நடிகர்கள், நடிகைகள் மறைவு ரசிர்களை சோகத்தில் ஆழ்த்தியது. அந்த வரிசையில் தற்போது பிரபல சாண்டல்வுட் நடிகர் தபோரி சத்யா காலமானார். அவருக்கு 46 வயது.

தபோரி சத்யா சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். நுரையீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு பெங்களூரு பிஜிஎஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. 

தபோரி சத்யா

லூஸ் மட யோகேஷ் நடித்த 'நந்தா லவ்ஸ் நந்திதா' உட்பட பல படங்களில் நடித்தவர் தபோரி சத்யா. இந்த படத்தில் அவர் குவாட்ரூ என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். நடிப்பு மட்டுமின்றி இயக்குவதிலும் ஆர்வம் கொண்டிருந்த சத்யா, ‘மேளா’ என்ற படத்தை இயக்கியிருந்தார். 

தபோரி சத்யா

இன்னொரு புதிய படத்தை இயக்குவதற்கு சத்யா தயாராகிவந்த நிலையில், அவரது ஆசை நிறைவேறும் முன்னரே எட்டாத உலகத்திற்கு பயணித்து விட்டனர். சத்யாவுக்கு மனைவி மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். தபோரி சத்யாவின் மறைவுக்கு கன்னட திரையுலகம் இரங்கல் தெரிவித்துள்ளது. சத்யாவின் உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!