பிரபல நடிகரின் மகள் ஹோட்டலில் சடலமாக மீட்பு!

 
ஹாலிவுட்

 

புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் டாமி லீ ஜோன்ஸின் மகள் விக்டோரியா, புத்தாண்டு தினத்தன்று சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ஆடம்பர ஹோட்டலில் இறந்து கிடந்தார். அதிகாலை அவர் சுயநினைவின்று இருப்பதாக ஹோட்டல் ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவசர மருத்துவ குழு வரவழைக்கப்பட்டது.

ஹாலிவுட்

சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவர்கள் CPR செய்து பார்த்தனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. விக்டோரியா, டாமி லீ ஜோன்ஸின் இரண்டாவது மனைவி கிம்பர்லியா க்ளோலேவின் மகள் ஆவார். அவருக்கு வயது 34.

ஹாலிவுட்

சிறுவயதில் சில திரைப்படங்களில் விக்டோரியா நடித்துள்ளார். ‘மென் இன் பிளாக் 2’ உள்ளிட்ட படங்களில் அவர் தோன்றியுள்ளார். அவரது மரணம் குறித்து இதுவரை குடும்பத்தார் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மரண காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!