17 வருட திருமணத்திற்கு முற்றுப்புள்ளி… பிரபல நடிகர் விவாகரத்து...
மலையாள திரையுலகில் கவனம் பெற்ற நடிகர் ஷிஜு ஏ.ஆர், தனது மனைவி பிரீத்தியுடன் விவாகரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இந்த தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பரஸ்பர சம்மதத்துடன் பிரிந்ததாகவும், தொடர்ந்து நண்பர்களாக இருப்போம் என்றும் ஷிஜு தெரிவித்துள்ளார்.
பிரீத்தி விமானப் பணிப்பெண்ணாக இருந்தபோது, ஷிஜுவுடன் தற்செயலாக ஏற்பட்ட சந்திப்பே காதலாக மாறியது. அந்த காதல் 2008-ஆம் ஆண்டு திருமணமாக முடிந்தது. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். நீண்ட காலமாக இணைந்து வாழ்ந்த இந்த தம்பதி, தற்போது தனித்தனி பாதையில் பயணிக்க முடிவு செய்துள்ளனர்.

17 ஆண்டுகள் நீடித்த திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்த அறிவிப்பு, ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. ஷிஜுவின் பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. திரையுலகில் மேலும் ஒரு விவாகரத்து என்ற செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
