சோழா விருது பெற்ற பிரபல நடிகர் தூக்கிட்டு தற்கொலை... பெரும் சோகம்!

 
அகில் விஸ்வநாத்
 

பிரபல மலையாள நடிகர் அகில் விஸ்வநாத் (30), இன்று தனது வீட்டில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். இவரது மறைவுச் செய்தி திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவர் 2019ஆம் ஆண்டு வெளியான 'சோழா' படத்திற்காக கேரள அரசின் திரைப்பட விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அகில் விஸ்வநாத்

'சோழா' திரைப்படம் மட்டுமின்றி, 'ஆபரேஷன் ஜாவா' உள்ளிட்ட பல படங்களில் அகில் விஸ்வநாத் நடித்துள்ளார். மேலும், 'மாங்காண்டி' படத்தில் நடித்ததற்காக தனது சகோதரருடன் இணைந்து கேரள அரசின் சிறந்த குழந்தை நட்சத்திர விருதையும் பெற்றிருக்கிறார். சமீபத்தில், இவரது தந்தை விஸ்வநாத் பைக் விபத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், அகிலின் மரணம் நிகழ்ந்துள்ளது.

அகில் விஸ்வநாத்

நடிகர் அகிலின் தாயார் கீதா இன்று வேலைக்குச் செல்ல தயாரானபோது, அகில் மயங்கிய நிலையில் கிடந்ததைக் கண்டதே இந்தச் சோக நிகழ்வுக்கு வழிவகுத்தது. அகிலின் மரணத்திற்கான சரியான காரணம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை. எனினும், அவர் உடல்நலக் குறைவால் இறந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது மரணம் குறித்து காவல்துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!