திரையுலகில் சோகம்... 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் புற்றுநோயால் திடீர் மரணம்!

தமிழ் மலையாளத்தில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகர் ரவிக்குமார். இவர் உடல் நலக்குறைபாடு காரணமாக சென்னையில் காலமானார். இவருக்கு வயது 71. நடிகர் ரவிக்குமாரின் பூர்வீகம் கேரள மாநிலம், திருச்சூர். ஆனால் இவர் பிறந்தது சென்னையில் தான். மலையாளத்தில் லக்ஷபிரபு என்ற படத்தில் சிறு வேடத்தில் தோன்றினார். அதன்பின் மலையாளத்தில் பல படங்களில் ஹீரோ, குணச்சித்ர வேடங்களில் நடித்தார்.
தமிழ் திரையுலகில் பாலசந்தர் இயக்கிய அவர்கள் படத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சுஜாதா ஆகியோர் உடன் இணைந்து நடித்து நடிகராக அறிமுகமானார். பகலில் ஓர் இரவு படத்தில் வரும் இளமை எனும் பூங்காற்று பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து தமிழில் மலபார் போலீஸ், ரிஷி, ரமணா, லேசா லேசா, சிவாஜி உட்பட பல படங்களில் குணச்சித்ர வேடங்களில் நடித்துள்ளார்.
சின்னத்திரையில் ராதிகாவின் சித்தி, செல்வி, அரசி, செல்லமே, வாணி ராணி போன்ற பல டிவி தொடர்களிலும் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர்.
40 ஆண்டுகளுக்கு மேலாக சினிமா துறையில் இருந்து வந்த ரவிக்குமார் வயது உடல்நலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை ஏப்ரல் 4ம் தேதி காலமானார். அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. ரவிக்குமார் உடல் வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை இறுதிச்சடங்கு நடைபெற இருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். பிரபலங்கள் பலரும் இவரது திடீர் மறைவுக்கு பெரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!