பிரபல பாலிவுட் நடிகர் காலமானார்.... அமைச்சர் இரங்கல்!

 
விவேக் லாகூ


 பிரபல மூத்த நடிகர் விவேக் லாகூ. இவர் ஜூன் 19ம் தேதி நேற்று வியாழக்கிழமை காலமானார். இவர்  இந்தி மற்றும் மராத்தி சினிமாவில் தனது பணிக்காக அவர் பிரபலமாக அறியப்பட்டார். இந்த மறைவுச் செய்தியை பத்திரிகையாளர் விக்கி லால்வானி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் .  அவரது இறுதிச் சடங்குகள் ஜூன் 20ம் தேதி  மும்பையில் நடைபெறும்.

இவரது மனைவி மூத்த நடிகை பிரபல நடிகை ரீமா லகூ. இவர்   'மேனே பியார் கியா', 'ஹம் ஆப்கே ஹை கவுன்' மற்றும் 'ஸ்ரீமான் ஸ்ரீமதி' போன்ற படங்களில் நடித்துள்ளார்.  1978 ல் திருமணம் செய்து கொண்ட இவர்களில் சில ஆண்டுகளிலேயே   பிரிந்தனர். ரீமா லோகோ 2017 இல் அகால மரணம் அடையும் வரை இருவரும் நல்லுறவில் இருந்தனர்.


இவரது மறைவு குறித்து மகாராஷ்டிர கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சர் ஆஷிஷ் ஷெலர்,  X  பதிவில்   “ஆத்மா நிறைந்த அஞ்சலி!… நடிகர் விவேக் லாகூவின் மறைவுச் செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. அவரது மறைவால், மராத்தி நாடகம் மற்றும் திரைப்படத்துறை ஒரு புன்னகை, எச்சரிக்கை மற்றும் உணர்திறன் மிக்க ஆளுமையை இழந்துள்ளது.” மேலும் அவர் எழுதினார், “மேடையில் அவரது வலுவான நடிப்பு பாணி, தொலைக்காட்சியில் அவரது மென்மையான மற்றும் தொடும் பாத்திரங்கள் மற்றும் சில சமயங்களில் அவரது மென்மையான நகைச்சுவை அவரை ரசிகர்களின் இதயங்களில் நிரந்தர இடமாக்கியுள்ளது. கடவுள் அவரது ஆன்மா சாந்தியடையட்டும், அவரது குடும்பத்தினருக்கு இந்த இழப்பைத் தாங்கும் வலிமையை வழங்கட்டும், இதுவே எங்கள் பிரார்த்தனை.” எனக் கூறியுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது