காலையிலேயே அதிர்ச்சி... பிரபல சீரியல் நடிகர் தற்கொலை!

 
நிதின்

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் நகரில் வசித்து வருபவர்  நிதின் சவுகான். 35 வயதாகும் இவர் மும்பையில் தங்கியிருந்தபடியே தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்திருக்கிறார். தாதாகிரி 2 என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.  எம்.டி.வி.யின் ஸ்பிளிட்ஸ்வில்லா 5 நிகழ்ச்சியில் தோன்றியிருக்கிறார்.

நிதின்

ஜிந்தகி டாட் காம், கிரைம் பேட்ரல் மற்றும் பிரெண்ட்ஸ் போன்ற தொடர்களிலும் நடித்திருக்கிறார். கடைசியாக எஸ்.ஏ.பி. டி.வி.யின் தேரா யார் ஹூன் மெயின் என்ற தொடரில் நடித்திருக்கிறார்.

 இந்நிலையில், நிதின் மரணம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை  அவருடன் நடித்தவர்களான சுதீப் சாஹிர் மற்றும் சயந்தனி கோஷ் இருவரும் உறுதி செய்துள்ளனர்.

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

இது குறித்த காரணங்கள் தெரியவில்லை எனவும்  தெரிவித்தனர். நிதினுடன் ஒன்றாக நடித்தவரான விபுதி தாக்குர், அவருடைய சமூக ஊடக பதிவில், நிதின் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறியுள்ளார். தகவல் அறிந்து  நிதினின் தந்தை மும்பைக்கு விரைந்துள்ளார்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

 

From around the web