பிரபல நடிகரின் கள்ளக்காதலை அம்பலப்படுத்திய மனைவி... பாலிவுட்டில் பரபரப்பு!
பாலிவுட் நடிகர் கோவிந்தா மற்றும் அவரது மனைவி சுனிதா தம்பதியினரிடையே ஏற்பட்டுள்ள விரிசல், தற்போது பகிரங்கமான குற்றச்சாட்டுகள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த 37 ஆண்டுகளாக இணைந்து வாழும் கோவிந்தா - சுனிதா தம்பதியினரிடையே கடந்த சில மாதங்களாகவே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தன. இவர்கள் விவாகரத்து பெறப்போவதாகவும் வதந்திகள் பரவின. ஆனால், கடந்த செப்டம்பர் மாதம் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் இருவரும் ஒன்றாகத் தோன்றி அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

தற்போது ஊடகங்களுக்குப் பேட்டியளித்துள்ள சுனிதா அஹுஜா, தனது கணவரின் தற்போதைய நிலை குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார்: "எனது கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார். அந்தப் பெண் கோவிந்தாவை காதலிக்கவில்லை, மாறாக அவருடைய பணத்துக்காக மட்டுமே பழகி வருகிறார். எனக்கு நடிகைகள் மீது எப்போதும் மரியாதை உண்டு. ஆனால், தவறான எண்ணம் கொண்ட பெண்களை என்னால் ஒருபோதும் ஏற்க முடியாது."
"பணத்துக்காக அவரைச் சுற்றி இருக்கும் 'ஜால்ராக்களிடம்' இருந்து அவர் விலகி இருக்க வேண்டும். அவர் தனது குடும்பம் மற்றும் தொழிலில் மீண்டும் கவனம் செலுத்த வேண்டும் என்பதே எனது விருப்பம். இந்த 2025-ம் ஆண்டு தங்களது குடும்பத்திற்குப் பெரும் மன உளைச்சலைத் தந்த ஆண்டாக அமைந்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ள சுனிதா, வரும் 2026-ம் ஆண்டிலாவது இந்தச் சர்ச்சைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து, தங்களது குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் திரும்ப வேண்டும் என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

கோவிந்தா தரப்பில் இருந்து இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை. மூத்த நடிகர் ஒருவரின் குடும்பப் பிரச்சினை பொதுவெளிக்கு வந்துள்ளது பாலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
