பிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி!! ரசிகர்கள் அதிர்ச்சி!!

 
மாளவிகா அவினாஷ் மாளவிகா அவினாஷ்

பிரபல நடிகை மாளவிகா அவினாஷ் அண்ணி சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தவர். இவர் ஒரு இந்திய நடிகை, வழக்கறிஞர், ஆர்வலர் மற்றும் அரசியல்வாதியாகவும் இருந்து வருகிறார்.  இவர் தென்னிந்திய திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் நடித்துப் பிரபலம் ஆனவர்.  வசூலை அள்ளிக் குவித்த  கன்னட திரைப்படமான KGF ல் முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். அண்ணி சீரியலுக்கு பிறகு  ஜேஜே படத்தில் கதாநாயகி ஜமுனாவின் சகோதரியாக முழு நீள திரைக்கதையில் பயணித்து தனது தத்ரூபமான நடிப்பை வெளிக்காட்டியிருந்தார்.

மாளவிகா அவினாஷ்

இவரது நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பிறகு ஆறு படத்தில் கலாபவன் மணி மனைவியாகவும், டிஷ்யூம் படத்தில் சந்தியாவின் தாயாகவும், ஆதி படத்தில் ராமச்சந்திரன் மனைவியாகவும் பல  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கேஜிஎப் படத்திற்கு பிறகு அவரது ரேஞ்ச் மாறிவிட்டது. தொடர்ந்து பல நல்ல வாய்ப்புகள் கிடைத்தன. திரைப்படங்கள் தவிர, பல தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களுக்கு நடுவராகப் பணிபுரிந்தார். அவர் ஒற்றை தலைவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

மாளவிகா அவினாஷ்

" உங்களில் யாருக்காவது மைக்ரேன்  ஒற்றை தலைவலி பிரச்சனை இருந்தால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.. இல்லையேல் நீங்கள் என்னைப் போல் ஆஸ்பத்திரி படுக்கையில் இருக்க வேண்டியிருக்கும். ஒற்றைத் தலைவலி பிரச்சனையில் இருந்து விடுபட பாரம்பரிய மருத்துவத்துடன் பனடோல், நெப்ரோசிம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டேன்.  ஒற்றைத் தலைவலி பிரச்சனை உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது " எனத் தெரிவித்துள்ளார். தற்போது மாளவிகாவின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!