பிரபல நடிகைக்கு திருமணம்! 11 ஆண்டுகால காதலனைக் கரம் பிடித்தார்!

 
சித்ராஷி ராவத்

பிரபல பாலிவுட் நடிகை சித்ராஷி ராவத் தனது 11 ஆண்டுகால காதலனான துருவாதித்யா பகவானியை கரம் பிடித்தார்.

பாலிவுட் நடிகர் ஷாருக் கான் நடிப்பில் 2007ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சக் தே இந்தியா. இந்த திரைப்படத்தில் நடத்து பிரபலமடைந்தவர் சித்ராஷி ராவத். அதன்பின் லக், பிளார் ஹோம், தேரே நள் லவ் ஹோ கயா, பிரேம் மாயீ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தேசிய அளவிலான தடகள வீராங்கனையாக இருந்து நடிகையாக பெயர் பெற்றவர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

சித்ராஷி ராவத்

நடிகை சித்ராஷி ராவத் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் துருவாதித்யா பகவானி என்பவரை காதலித்து வந்தார் இந்த நிலையில், கடந்த வாரம் திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்தார்.  

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

அதனடிப்படையில், பிப்.4ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் கடந்த 3 நாள்களாக திருமண விழா நடந்தது. மெஹந்தி, ஹல்தி, மோதிரம் மாத்தும் விழா கோலாகலமாக நடந்து முடிந்தது. அதைத்தொடர்ந்து நேற்று திருமணம் நடந்து முடிந்தது. திருமணம் முடிந்த கையோடு புதுமண ஜோடிகள் சிறிய அளவிலான தேரில் வலம் வந்தனர். அந்த நேரத்தில் ஆடியும், பாடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

சித்ராஷி ராவத்

தனது திருமணம் குறித்து சித்ராஷி ராவத் தனது சமூக வலைதள பக்கத்தில், திருமணத்திற்குப் பிறகும் நாங்கள் அன்புடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்வோம். இப்போது சத்தீஸ்கர் மாநிலத்தின் மருமகளாகிவிட்டேன்.சத்தீஸ்கதியா சேபிள் பதியா, எனப் பதிவிட்டுள்ளார். இந்த திருமணத்தின் பின்பு நடந்த வரவேற்பு விழாவில் பாலிவுட் நடிகைகள் தன்யா அப்ரோல், சுபி மேத்தா, ஷில்பா சுக்லா, ஸ்ருதி பன்வார், சீமா ஆஸ்மி, டெல்னாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

 

From around the web