பிரபல நடிகை மன்னாரா சோப்ராவின் தந்தை காலமானார்...!

 
மன்னாரா சோப்ரா


 
இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை மன்னாரா சோப்ரா. இவரது   தந்தை ராமன் ராய் ஹன்டா காலமானார். அவருக்கு வயது 72. தன் அப்பா இறந்ததை சமூக வலைதளத்தில்  மன்னாரா சோப்ரா பதிவிட்டுள்ளார்.  
பாலிவுட் நடிகை மன்னாரா சோப்ராவின் தந்தையும், பிரபல வழக்கறிஞருமான ராமன் ராய் ஹன்டா உடல்நலக் குறைவால் ஜூன் 16ம் தேதி உயிரிழந்தார். தந்தையை இழந்து வாடும் மன்னாராவுக்கு பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.  

மன்னாரா சோப்ரா

ராமன் ராய் ஹன்டா கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் காலமானார். ஜூன் 18ம் தேதி அவரின் இறுதிச் சடங்கு நடக்கிறது.சித்தப்பா ராமன் இறந்த செய்தி அறிந்த நடிகை ப்ரியங்கா சோப்ரா இன்ஸ்டாகிராமில் தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.  சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 17 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாவது ரன்னர் அப் ஆக வந்தார் மன்னாரா சோப்ரா. அந்த நிகழ்ச்சி மூலம் அவருக்கு பெயரும், புகழும் கிடைத்தது. 

பிரியங்கா சோப்ரா
ஜித் இந்தி படம் மூலம் நடிகையான மன்னாரா சோப்ராவின் இரண்டாவது படம் சரத்குமாரின் சண்டமாருதம்.  தலைவன் விமலின் காவல் படத்திலும் ஒரு பாடலுக்கு  டான்ஸ் ஆடியிருந்தார் மன்னாரா சோப்ரா.  அவர் இதுவரை ஆறு தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். 11 ஆண்டுகளாக படங்களில் நடித்து வருகிறார். படங்கள் தவிர்த்து இந்தி வெப்தொடர்கள், இசை வீடியோக்களிலும் மன்னாரா சோப்ரா நடித்து வருகிறார்.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது