பெண்கள் என்ன பாலியல் பொருளா ? பாடகர் மீது வழக்கு தொடர்ந்த பிரபல நடிகை!

 
நீது சந்திரா
 பிரபல பாலிவுட் நடிகை நீத்து சந்திரா. இவர்  'கரம் மசாலா', 'டிராஃபிக்' போன்ற ஹிந்தி படங்களில் நடித்து பிரபலமானவர். இவர்  யோ யோ ஹானி சிங்கின் இந்த புது பாடலில் "வெளிப்படையா ஆபாசம் இருக்குற மாதிரி காட்டுறாங்க" என்றும் "பெண்களை வெறும் பாலியல் பொருளா காட்டுறாங்க"னும் சுட்டிக்காட்டி பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். 

 நீது சந்திரா
இந்த பாட்டு "போஜ்புரி மொழியில ஆபாசத்தை சகஜமாக்குறதுக்கு" பயன்படுத்துறாங்கனும், "பெண் முன்னேற்றத்தை பின்னுக்கு தள்ளுது"னும் நடிகை நீத்து சந்திரா குற்றம் சாட்டி உள்ளார். ஹானி சிங்குக்கு எதிராகவும், பாட்டு எழுதுன லியோ கிரேவால், அப்பாடலை பாடிய ராகினி விஸ்வகர்மா, அர்ஜுன் அஜனாபி உட்பட பாட்டுக்கு பின்னாடி வேலை செய்த அனைவரின் மீதும் நீத்து மனு தாக்கல் செய்துள்ளார். ஒரு காலத்தில் இந்தியிலும், தென்னிந்தியாவிலும் பிசியாக நடித்து வந்த நீத்து சந்திரா தற்போது ரெண்டு போஜ்புரி படங்களை தயாரித்துள்ளார். அங்கே அந்த படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.  

இந்தப் பாடல் வரிகளை மாற்ற வேண்டும் என்று இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு கோர்ட் உத்தரவிட வேண்டும் என நீத்து சந்திரா மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த பொதுநல மனு விரைவில் விசாரணைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.  ஹானி சிங் ஏற்கனவே அவரோட பாடல் வரிகளினால் நிறைய பிரச்சனையில் சிக்கியிருக்கிறார். யோ யோ ஹனி சிங்குக்கு நிறைய ரசிகர்கள் இருக்காங்க. ஆங்ரேஜி பீட், பிரவுன் ரங், கலாஸ்டார்னு நிறைய ஹிட் பாடல்களை அவர் கொடுத்திருக்கிறார்.  

நீது சந்திரா


இருப்பினும் இந்த பாடல் வரிகளுக்காக நிறைய விமர்சனங்களும் வந்தன. அவருடைய பாடல் பல முறை பெண்களுக்கு எதிராவும், அவர்களை இழிவுபடுத்தும் வகையிலும் இருப்பதாக  நீத்து சந்திரா கூறி இருக்கிறார். இதற்கு பதில் அளித்த பாடகர் யோ யோ ஹானி சிங் தான் பெண்களை மதிக்கிற ஆளு எனவும் அவங்கள ஒரு பொருளா பாக்குறது இல்லன்னு பேட்டியில் கூறி இருக்கிறார். ஹானி சிங் தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் படத்தில் ஸ்பீடு ஸ்பீடு என்ற பாடலை பாடி இருந்தார்.  நடிகை நீத்து சந்திரா தமிழில் விஷால் ஜோடியாக தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web