முன்னாள் மிஸ் கல்கத்தாவும், பிரபல நடிகையுமான ஜெயஸ்ரீ காலமானார்!
புகழ்பெற்ற வங்காள திரைப்பட நடிகையும், முன்னாள் மிஸ் கொல்கத்தாவுமான ஜெயஸ்ரீ கபீர், கடந்த 12-ந்தேதி லண்டனில் காலமானார். அவருக்கு வயது 73. அவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

1968-ம் ஆண்டு மிஸ் கொல்கத்தா பட்டம் வென்ற ஜெயஸ்ரீ கபீர், சத்யஜித் ரே இயக்கிய ‘பிரதித்வந்தி’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். ‘பிக்னிக்’, ‘சப்யசாச்சி’ உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். இந்தியாவிலும் வங்காளதேசத்திலும் பிரபல நடிகையாக திகழ்ந்தார்.

1975-ம் ஆண்டு திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகளில் விவாகரத்து பெற்றார். பின்னர் லண்டனில் குடியேறி கல்விப் பணியில் ஈடுபட்டார். ஆங்கில இலக்கிய பேராசிரியராக பணியாற்றினார். அமைதியான வாழ்க்கையை விரும்பிய அவர், பொது நிகழ்ச்சிகளை தவிர்த்து வந்தார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது உறவினர் ஜாவேத் மஹ்மூத் தெரிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
