பிரபல நடிகை சினிமாவிலிருந்து ஓய்வு!! ரசிகர்கள் அதிர்ச்சி!!

 
மீரா ஜாஸ்மின்

தமிழ் சினிமாவில் ரன் படத்தின் மூலம் அறிமுகமாகி 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகையாக மாறியவர் நடிகர் மீரா ஜாஸ்மின் . இவர்  தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என தென்னிந்திய மொழி படங்களில் நடித்து ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டவர். ரன் படத்தில் துறுதுறு கேரக்டர் மற்றும் குறுகுறு பார்வையின் மூலம்  ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட நடிகையானார்.   முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததால்  விஜய் உடன் புதிய கீதை, அஜித்துடன் ஆஞ்சநேயா  ஆயுத எழுத்து படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

மீரா ஜாஸ்மின்


 அடுத்தடுத்த தோல்விகளால் துவண்ட மீரா ஜாஸ்மின் மீண்டும் லிங்குசாமி இயக்கத்தில்   வெளியான சண்டைக்கோழி படம் வெற்றிப்படமாக அமைந்தது.  தாவணி போட்ட தீபாவளி பாடல் முழுவதுமே மீரா ஜாஸ்மினின் இளமை ததும்பும் நடிப்பு எல்லோரையும் கவர்ந்து இழுத்தது. இந்த படத்தின் மூலம் தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருது மற்றும் கலைமாமணி விருது என இளம் வயதிலேயே பல்வேறு விருதுகளை அள்ளிக் குவித்தவர். இதன் பிறகு  மீரா ஜாஸ்மின் திடீரென திருமணம் செய்து கொண்டு திரையுலகில் இருந்து காணாமல் போனார்.  இந்நிலையில் தான் திடீரென சமூக வலைத்தளங்கள் மூலமாக இவர் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு அழகான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.  

மீரா ஜாஸ்மின்


 தற்போது நடிகர்கள் மாதவன், சித்தார்த் நடிப்பில் உருவாகும் ‘டெஸ்ட்’ படத்தில் நடிகை மீரா ஜாஸ்மின் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இப்படம் இயக்குநர் சசிகாந்த் இயக்கத்தில்  சக்திஸ்ரீ கோபாலன் இசையமைப்பில் உருவாகி வருகிறது.  சமீபத்தில் மீரா ஜாஸ்மின் அளித்த பேட்டி ஒன்றில் மீண்டும் படங்களில் நடிப்பதிலிருந்து ஓய்வு எடுக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.   சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படங்களில் நடிக்க இருப்பதாகவும் மீரா ஜாஸ்மின் தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web