அதிர்ச்சி... மாதவனுடன் படப்பிடிப்பில் இருந்த நடிகை... விபச்சார வழக்கில் திடீர் கைது! மும்பையில் பரபரப்பு!

 
ஆர்த்தி

கடந்த சில நாட்களுக்கு முன்பு, நடிகர் மாதவனுடன் படப்பிடிப்பில் இருந்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த நடிகையும், பிரபல மாடலும், கேஸ்டிங் இயக்குநருமான ஆர்த்தி  மிட்டல், விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையில் பிரபல நடிகையும் காஸ்டிங் டைரக்டருமாக இருந்து வருபவர் ஆர்த்தி மிட்டல் . இவர் மாடல் அழகிகளை வைத்து விபச்சாரம் நடத்துவதாக மும்பை காவல்துறைக்கு ரகசிய  தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு  போலீசார் மாறுவேடத்தில் ஆர்த்தியை அணுகி 2 நண்பர்களுக்கு 2 மாடல் அழகிகள் தேவை எனக் கூறினர். இதனை உண்மை என நம்பிய 2 மாடல் அழகிகளை சப்ளை செய்தார்.

ஆர்த்தி

அவர்கள் மீட்கப்பட்டு  மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த பணிகளுக்காக நடிகை ஆர்த்தி அழகிகளுக்கு  தலா ரூ.15,000 தருவதாக  உறுதியளித்ததாக மாடல் அழகிகள் போலீசாரிடம் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி  வளர்ந்து வரும் இளம் மாடல்களை ஆர்த்தி மிட்டல் விபசாரத்தில் ஈடுபடுத்தி அதன் மூலம் பணம் சம்பாதித்து வந்துள்ளார். இந்த மோசடியை முறியடித்து மிட்டலை கைது செய்தனர். அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த அழகிகளை ஏற்பாடு செய்ய ரூ60,000 பணம் கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

ஆர்த்தி

பல்வேறு திட்டங்களின் போது அவர்களைச் சந்தித்தபோது, ​​விபச்சாரத்தில் ஈடுபடுவதற்காக நல்ல பணம் கொடுத்து ஆர்த்தி அவர்களை குறி வைத்ததாகவும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.  ஆர்த்தி மிட்டல், இந்தித் திரைத்துறையினருக்கு நன்கு பரிச்சயமானவர். கேஸ்டிங் இயக்குநராகவும் இருப்பதால், பல இயக்குநர்கள், நடிகர்களுடன் தொடர்ப்பில் இருந்தவர் என்பதால், அவர் கைது செய்யப்பட்டிருப்பது மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆர்த்தி காஸ்டிங் டைரக்டர் மட்டுமல்ல 'அப்னாபன்' போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் ராஜ்ஸ்ரீ தாக்கூருடன் இணைந்து நடித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆர்த்தி நடிகர் மாதவனுடன் ஒரு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web