பிரபல பாலிவுட் நடிகர் காலமானார்!! சோகத்தில் திரையுலகம்!!

 
சமீர் சாகர்

பிரபல பாலிவுட் நடிகர் சமீர் காகர் .இவருக்கு வயது 70. இவர் மூச்சுத்திணறல் காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார். ”நக்கட்” தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் மூலம், மிகவும் பிரபலமானவர் நடிகர் சமீர் காகர். இவர் நக்கட் தொடரைத் தவிர, சர்க்கஸ், சஞ்சீவானி போன்ற பிரபலமான தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். மேலும், ஹாசி தோ ஃபேஸி, ஜெய் ஹோ, படேல் கி பஞ்சாபி ஷாதி உட்பட  பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

சமீர் சாகர்
கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சமீர் காகர் மூச்சு திணறல் ஏற்பட்டதால் உடனடியாக   மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். . நடிகர் சமீர் காகர் ஏற்கனவே சிறுநீரக பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தார். நேற்று பிற்பகல்  அவருக்கு சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டு, சுயநினைவை இழந்தார்.  மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில்  போரிவலி எம்.எம் மருத்துவமனையில் அனுமதித்தோம்

rip

அவருக்கு, வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. இருந்த போதும், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4:30 மணி அளவில் உயிரிழந்தார் என அவரது சகோதரர் தெரிவித்துள்ளார். அவரது இறுதிச்சடங்கு நடிகர் சமீர் காகர் இல்லத்தில் நடைபெறும் . அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பிற்பலில் இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு பாபாய் நாகா மயானத்தில் தகனம் செய்யப்படும் என அவரது சகோதரர் தெரிவித்துள்ளார். ரசிகர்களால், கோப்டியா என்று செல்லமாக அழைக்கப்படும்  பிரபல  நடிகர் சமீர் காகர் உயிரிழந்தது பாலிவுட் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web