பிரபல ஒளிப்பதிவாளர் மரணம்.. திரைப்பிரபலங்கள் அஞ்சலி !!

 
எம்.சி சேகர்

தமிழ் திரையுலகின் மூத்த ஒளிப்பதிவாளராக இருந்தவர் எம்.சி. சேகர். 1986 ஆம் ஆண்டு திரைத்துறைக்கு அறிமுகமான சேகர், ஆயிரம் கண்ணுடையாள், பன்னீர் புஷ்பங்கள் (பி. வாசுவின் அறிமுக திரைப்படம்), பணக்காரன், உழைப்பாளி, சேதுபதி ஐ.பி.எஸ், வால்டர் வெற்றிவேல், ரிக்ஷா மாமா, லவ் பேர்ட்ஸ், கூலி, ராஜ ரிஷி, இன்று போய் நாளை வா, நீதியின் நிழல் ஆகிய படங்களில் பணிபுரிந்தவர்.

பெரிய பெரிய நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து அவர்களின் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து புகழ் பெற்றவர். 150 படங்களுக்கு மேல் தமிழ் & மலையாள சினிமாவில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் எம்.சி.சேகர். 

 எம்.சி.சேகர்

இந்த நிலையில், வயது முதிர்வு காரணமாக தமது 91 வது வயதில் எம்.சி சேகர் நேற்றிரவு காலமானார். இயக்குனர் பி. வாசுவின் தந்தை பீதாம்பரம் நாயரின் தம்பி தான் ஒளிப்பதிவாளர் எம்.சி. சேகர். மேலும் இயக்குனர் பி. வாசுவின் ஆஸ்தான கேமரா மேனாகவும் செயல்பட்டவர். 

பீதாம்பரம் நாயர், எம்.ஜி.ஆர் மற்றும் என்.டி.ஆர் ஆகியோரின் படங்களில் மேக்கப் மேனாக பணியாற்றியவர்.  தமிழ் மற்றும் தெலுங்கில் சுமார் 25 படங்களைத் தயாரித்து, முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். ஒளிப்பதிவாளரான எம்.சி.சேகர் & இயக்குனர் பி. வாசுவின் தந்தை பீதாம்பரம் இருவரும் இணைந்து பல படங்களை தயாரித்துள்ளனர். 

 எம்.சி.சேகர்

இந்த நிலையில் ஒளிப்பதிவாளர்  எம்.சி.சேகர் மறைவுக்கு பல்வேறு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web