பிரபல நகைக்சுவை நடிகர் அல்லு ரமேஷ் மாரடைப்பால் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி !!

 
அல்லு ரமேஷ்

அண்மைக்காலமாக திரையுலக பிரபலங்கள் அடுத்தடுத்து மறைந்து வருவது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை கொடுத்துள்ளது. அந்த வகையில், பிரபல நடிகர் அல்லு ரமேஷ் மறைவு திரைத்துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராக வலம் வந்தவர் அல்லு ரமேஷ் (52). காமெடி நடிகரான இவர், தனது யதார்த்த நடிப்பால் மக்களை சிரிக்க வைத்து அவர்களின் மனத்தில் இடம்பிடித்தார். அல்லு ரமேஷ் ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில், இவருக்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. அதன்பின் அவர் உடனே உயிரிழந்து விட்டார். 

அல்லு ரமேஷ்

இதனால் குடும்பத்தினர் கண்ணீர் கவலையில் ஆழ்ந்தனர். இதனை அறிந்து ரசிகர்கள் மற்றும் அவரது நண்பர்கள் வேதனை அடைந்தனர். அவரது இந்த மறைவை, ரமேசின் நண்பரான, திரைப்பட இயக்குநர் ஆனந்த் ரவி தனது சமூக ஊடகத்தில் பகிர்ந்து வேதனையை தெரிவித்து உள்ளார்.

அல்லு ரமேஷ்

முதன்முதலாக சிருஜல்லு என்ற படத்தில் நடிக்க தொடங்கி தனது திரைப்பயத்தை அல்லு ரமேஷ் தொடங்கினார். அதன்பின்னர், மதுரா வைன்ஸ், வீதி, டோலு பொம்மலதா மற்றும் நெப்போலியன் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றார். கடைசியாக அவரது நடிப்பில் அனுகோனி பிரயாணம் என்ற படம் வெளிவந்தது. அவரது மறைவை அடுத்து, ரசிகர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்த அவரது நண்பர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web