பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்!! திரையுலகில் அடுத்த அதிர்ச்சி!!

 
செவ்வாழை ராசு

திரையுலகில் அடுத்தடுத்த திடீர் மரணங்கள் திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாகி வருகிறது. காமெடி நடிகர் மயில்சாமி, இயக்குநர் மனோபாலா இவர்களின் திடீர் மரணம் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாத நிலையில் அடுத்த அதிர்ச்சியாக நகைச்சுவை நடிகர் உயிரிழந்துள்ளார். பருத்திவீரன் திரைப்பட புகழ் நடிகர் செவ்வாழை ராசு உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 70.

செவ்வாழை ராசு

செவ்வாழை ராசு தமிழில் பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும் காமெடி நடிகராகவும் நடித்தவர்.  கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் திரைப்படத்தில் செவ்வாழை என்ற கதாபாத்திரத்தில் நடித்தது மூலம் செவ்வாழை என்ற அடைமொழி சேர்ந்து கொண்டது. செவ்வாழை ராசு மைனா, கிழக்குச் சீமையிலே, கந்தசாமி உட்பட பல திரைப்படங்களில் இவரது நடிப்பு ரசிகர்களால் பெரும் வரவேற்பை பெற்றது.  இவர்  கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் . இந்நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்

செவ்வாழை ராசு
இவருக்கு 3 மகன்கள்.  அவரது உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் உள்ள கோரையூத்து கிராமத்திற்கு  கொண்டு செல்லப்படுகிறது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  இவரது மறைவிற்கு திரை நட்சத்திரங்கள், சக நடிகர்கள், நண்பர்கள், உறவினர்கள், ரசிகர்கள் இரங்கல் பதிவினை வெளியிட்டு வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web