பிரபல நகைச்சுவை நடிகர் மாரடைப்பால் காலமானார்!! திரையுலகில் சோகம்!!

 
மாமுகேயா

பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் மாமுகோயா.இவருக்கு வயது 76. இவர் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைபாடு காரணமாக  காலமானார்.  பொதுநிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு  கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருந்தார். சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகலில் உயிரிழந்தார்.  இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் மாரடைப்பு காரணமாக மரணம் ஏற்பட்டதாக செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.

மாமுகேயா

இதனையடுத்து அவரது உடல் இன்று பிற்பகல் 3 மணி முதல் கோழிக்கோடு டவுன் ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. நாளை கண்ணாம்பரம் காபர்ஸ்தானில் உடல் அடக்கம் செய்யப்படும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 1946 ஜூலை 5ம் தேதி கடற்கரை கிராமமான பள்ளிகண்டியில் மம்மது மற்றும் இம்பிச்சி ஆயிஷா தம்பதியருக்கு மாமுகோயா மகனாக பிறந்தார். 1979 இல், மாமுகோயா நிலாம்பூர் பாலன் இயக்கத்தில் அன்யார் பூமி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். தமிழ் , பிரஞ்ச் சினிமா உட்பட இவர் இதுவரை  450 படங்களில் நடித்து உள்ளார்.

மாமுகேயா

ராமோஜி ராவ் ஸ்பிகீங், வடக்கு நோக்கி எந்திரம்,saaகோரம், காந்திநகர் 2வது தெரு, சந்தேஷம், ராஜதந்திரம், உட்பட பல படங்களில் இவரது நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.  இந்தியில் 'ரீமேக்' ஆகும் 'பரியேறும் பெருமாள்' இன்னத்தே சிந்த விஷயம் படத்திற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான கேரள மாநில திரைப்பட விருதை பெற்றவர். மாமுகோயாவிற்கு மனைவி சுகாரா மற்றும்  4 பிள்ளைகள். இவரது திடீர் உயிரிழப்புக்கு திரைத்துறையினர், பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் செய்தியை பதிவிட்டு வருகின்றனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web