பெரும் சோகம்... 33 வயசு தான்... பிரபல காமெடி நடிகர் மயங்கி சரிந்து திடீர் பலி!
கன்னட திரையுலகில் பிரபல காமெடி நடிகர் ராகேஷ் பூஜாரி. 33 வயதாகும் இவர் உடுப்பியில் நேற்று நடந்த திருமண மெஹந்தி விழா ஒன்றில் கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் தனது நண்பர்களுடன் உற்சாகமாக நடனமாடிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென நெஞ்சை பிடித்து கீழே சரிந்து விழுந்தார்.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் ராகேஷை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே பலியாகிவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். ராகேஷுக்கு இரத்த அழுத்தம் குறைந்து மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது மறைவு கன்னட திரையுலக மத்தியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காமெடி கிலாடி நிகழ்ச்சியின் வெற்றியாளரான ராகேஷ் பூஜாரி காந்தாரா படத்தில் முக்கிய வேடம் ஏற்றிருந்தார். காந்தாரா-2விலும் நடித்து வந்த நிலையில் தற்போது பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
