சீனாவில் இருந்து வெளியேறும் பிரபல நிறுவனங்கள்! அத்தனையும் இந்தியாவை நோக்கி படையெடுப்பு!

 
செல்போன் தொழிற்சாலை கம்ப்யூட்டர் தொழில்நுட்பம்

சீனாவில் நிலவும் அசாதாரணமான பொருளாதார சூழல், தொடரும் கரோனா அச்சுறுத்தல் ஆகியவற்றால், அங்குள்ள பல வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலையை தெற்காசியாவின் பிற நாடுகளுக்கு மாற்றும் முயற்சியில் உள்ளன. இதன் ஒரு பகுதியாக ஆப்பிள் நிறுவனம், தன் ஐ போன் தயாரிப்பு தொழிற்சாலையை, சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மாற்றுவதில் முழு வீச்சில் ஆர்வம் கொண்டுள்ளது.

பேக்டரி

உபி, தெலுங்கானா, கர்நாடகா அல்லது ஆந்திரா ஆகியவற்றில், ஏதாவது ஒரு மாநிலத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன் தொழிற்சாலை அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உள்கட்டமைப்புப் பணிகளை மேம்படுத்துவதில், இந்தியாவின் ஒவ்வொரு மாநில அரசும் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. அதேநேரத்தில், ஆப்பிள் நிறுவனம் சீனாவை விட்டு வெளியேறுவது, தன் தொழிற்துறை கட்ட மைப்பின் மீது, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பெரும் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும் என்று சீனா அச்சம் கொண்டுள்ளது. இதனால், ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரிகளை, சந்தித்துப்பேச சீனா திட்டமிட்டது.

இதன் ஒரு பகுதியாக சீனாவின் வர்த்தகத்துறை அமைச்சர் வாங் வென்டோ, ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டிம்குக்கை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது, வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கு சீனாவின் வர்த்தக கட்டமைப்பின் விரிவாக்கம் தொடர்பாக, சீனாவின் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

செல்போன் ஆப்பிள்

சீனாவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின்  ஐ போன் தொழிற்சாலையில் 3 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இங்கிருந்து சர்வதேச சந்தைக்கு பல லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அன்னிய செலாவணி கிடைப்பதால், ஆப்பிள் நிறுவனத்தை சீனாவிலேயே செயல்படும் வகையில், பல மேம்பாட்டுப் பணிகளை சீனா எடுத்து வருகிறது. ஆனால், இதன் ரிசல்ட் என்ன? என்பதை ஆப்பிள் நிறுவனம் தெரிவிக்கவில்லை.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web