பிரபல கிரிக்கெட் வீரர் விவாகரத்து... மனைவியின் இன்ஸ்டா வைரல்!
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல். இவரது மனைவி தனஸ்ரீ . இந்த தம்பதி விவகாரத்து செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருவரும் சமீப காலங்களில் தனித்தனியே வசித்து வருவதாகவும், இருவரின் விவாகரத்து தொடர்பான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் எனவும் நண்பர்கள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Yuzi Chahal's Instagram story. pic.twitter.com/mlEGpPOLLO
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 20, 2025
சாஹல் மற்றும் தனஸ்ரீ இடையிலான விவகாரத்து தொடர்பாக சட்டரீதியிலான நடைமுறைகள் அனைத்தும் நிறைவுபெறுவதாக புதிய தகவல் வெளியானது. முன்னதாக சாஹல் மற்றும் தனஸ்ரீ ஒருவரை ஒருவர் சமூக வலைதளங்களில் பின்தொடர்வதை நிறுத்தியுள்ளனர். மேலும், சாஹல் தனது இன்ஸ்டா பக்கத்தில் இருந்து மனைவி தனஸ்ரீயுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நீக்கியுள்ளார். இருவரும் பல மாதங்களாகப் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

எனினும், இதுப்பற்றி இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. தற்போது சாஹல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "நான் கணக்கில் வைக்க முடியாத அளவுக்கு பலமுறை கடவுள் என்னை பாதுகாத்துள்ளார். இதனால் நான் எத்தனை முறை காப்பாற்றப்பட்டேன் என்று எனக்கே தெரியாததை தான் நினைத்துப் பார்க்க வேண்டும். எனக்கே தெரியாத அளவுக்கு என்னுடன் இருந்ததற்கு கடவுளுக்கு மிக்க நன்றி. ஆமென்," என பதிவிட்டுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
