போதையில் ஓட்டி பிரபல இயக்குநர் கார் விபத்து… ஒருவர் உயிரிழப்பு!

போதையில் கார் ஓட்டிச் சென்ற பிரபல இயக்குநர், விபத்தை ஏற்படுத்திய நிலையில், ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பிரபல சினிமா இயக்குநர் சித்தாந்த், மது போதையில் கார் ஓட்டிச் சென்ற நிலையில், விபத்தை ஏற்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், தாகூர்புகூர் சந்தை பகுதிக்குள் இயக்குனர் சித்தாந்த் தாஸின் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்தை ஏற்படுத்தியது.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 6 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவித்தனர். இந்த விபத்தின் போது அவரும் காரில் இருந்த பெண் நிர்வாகியும் மது போதையில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விபத்து காரணமாக பொதுமக்கள் அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பிரபல சினிமா இயக்குனரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!