எம்மி விருது பெற்ற புகழ்பெற்ற இயக்குநர் காலமானார்...!
எம்மி விருது பெற்ற தயாரிப்பாளரும் இயக்குநருமான டாம் செரோன்ஸ் (86) காலமானார். அல்சைமர் நோயுடன் நீண்ட காலமாக போராடி வந்த அவர், அமெரிக்காவின் ஓரிகான் மாநிலம் புளோரன்ஸில் உள்ள தனது வீட்டில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மறைவு ஹாலிவுட் தொலைக்காட்சி உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்ட புகழ்பெற்ற சிட்காம் சீன்ஃபீல்ட் தொடரின் ஆரம்ப காலத்தில் டாம் செரோன்ஸ் முக்கிய பங்கு வகித்தார். 1990 ஆம் ஆண்டு ஒளிபரப்பான இரண்டாவது எபிசோடான தி ஸ்டேக்அவுட் episode-ஐ அவர் இயக்கி தயாரித்தார். மொத்தமாக 85 எபிசோடுகளில் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்றினார்.

சீன்ஃபீல்ட் தொடருக்கு அவர் செய்த பங்களிப்புக்காக 6 முறை எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். 1993 ஆம் ஆண்டு சிறந்த நகைச்சுவைத் தொடருக்கான எம்மி விருதை ஜெர்ரி சீன்ஃபீல்ட் மற்றும் லாரி டேவிட் ஆகியோருடன் இணைந்து வென்றார். டாம் செரோன்ஸ் மறைவு ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
