அஜித்தை அடிக்க பிரபல ஹீரோ.. மறுபடியும் வாய்ப்பு கொடுத்து வாழ்க்கை தருகிறார் அஜித்!

 
அஜித்

என்ன தான் அஜித், விஜய் என இருவருமே மாஸ் ஹீரோக்களாக இருந்தாலும் கூட பெரிய வெற்றியோ, படுபாதாள தோல்வியோ இருவருமே அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அடுத்த  படத்திற்கான வேலைகளில் மூழ்கி விடுவார்கள். இதிலும் அஜித் தான் டாஃப்பு. பெரிய வெற்றிகள் வந்த போதெல்லாம் அடுத்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில், பாடல் வெளியீட்டு விழாக்களில் விஜய்யின் பேச்சு வேறு மாதிரியாக இருக்கும். படத்தைப் பற்றி ஓவர் பில்டப் கொடுத்து மொத்த படக்குழுவும் களமிறங்குவார்கள். ஆனால், அஜித் படங்களில் அப்படி கிடையாது. எப்போதும் சலனமே இல்லாமல் இருக்கும் ஜென் நிலை அது.

இப்போது துணிவு மாஸ் கலெக்‌ஷனில் கலக்கி வருகின்ற நிலையில், அடுத்த படத்தில் பிரபல ஹீரோவை வில்லனாக களமிறக்க டிக் செய்திருக்கிறார் அஜித். யெஸ்... மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் ஏகே 62 படத்தில் வில்லனாக நடிக்க உள்ள நடிகர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக லைக்கா தயாரிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருந்த படத்தை, கதை பிடிக்காததால் விக்னேஷ் சிவனை விலக்கி விட்டார். இத்தனைக்கும் ரெண்டு, மூன்று சான்ஸ் கொடுத்தும் கதை தயாரிப்பில் விக்னேஷ் சிவன் கவனம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், விக்னேஷ் சிவனுக்கு பதிலாக இயக்குனர் மகிழ் திருமேனி அப்படத்தை இயக்க ஒப்பந்தமானார். 

AK 62

அருண் விஜய்க்கு வில்லனாக வாய்ப்பு கொடுத்து, இப்படி ஒரு நடிகர் இருக்கிறார் என்று கோடம்பாக்கத்துக்கே தெரிய வைத்த அஜித், தற்போது மீண்டும் அருண் விஜய்க்கு வாய்ப்பு கொடுத்து, அவரது சினிமா கிராஃப்பை ஏற்ற நினைக்கிறாராம். கிட்டத்தட்ட ஏகே 62 படத்தில் வில்லனாக மறுபடியும் அருண் விஜய் தான் நடிப்பார் என்கிறார்கள். 

Ajith - Arun vijay

ஏற்கனவே என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்திருந்த அருண் விஜய், மகிழ் திருமேனி இயக்கிய தடம், தடையறத் தாக்க போன்ற படங்களிலும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web