ரஜினி ஸ்டைலில் சிகரெட் பிடிக்கும் பிரபல ஹீரோயின் !! வைரலாகும் புகைப்படம்!!
பிரபல பாலிவுட் நடிகர் சன்கி பாண்டேவின் மகள் அனன்யா பாண்டே. இவர் 2019ல் வெளியான “ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் 2” படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதன் பிறகு காளி பேலி, கெஹாரியான் படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கிய ”லைகர் ”படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
நடிகை சார்மி தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியானது. லைகர் படத்தின் மூலம் தனது கெரியர் வேறலெவலுக்கு சென்றுவிடலாம் என நினைத்திருந்த நடிகை அனன்யாவுக்கு பெரும் ஏமாற்றமே . இந்த படம் படுதோல்வியை சந்தித்தது. இதன்பின் தென்னிந்திய படங்களே வேண்டாம் என முடிவெடுத்த அனன்யா, தற்போது பாலிவுட் படங்களில் மட்டும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். தற்போது டிரீம் கேர்ள் 2 என்கிற திரைப்படத்தில் ஆயுஷ்மான் குர்ரானாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் .
இந்நிலையில், மும்பையில் நடிகை அனன்யாவின் உறவினர் வீட்டுத் திருமணத்தில் கலந்து கொண்டார். அந்த திருமணத்தில் எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் நடிகை அனன்யா பாண்டே, ரஜினிகாந்த் போல் கையில் ஸ்டைலாக சிகரெட்டை வைத்துக்கொண்டு தம் அடித்துள்ளார். இந்த புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் உள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க