பிரபல இசையமைப்பாளர் மாரடைப்பால் திடீர் மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி !!

 
என்.பி.பிரபாகரன்

பிரபல இசையமைப்பாளர் என்.பி.பிரபாகரன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75.

மலையாள இசையமைப்பாளர் என்.பி.பிரபாகரன் கந்தவ ராத்திரி, அழகனந்தா, பூநிலவு, அழகனந்தா, அன்பற அச்சமா, அவள் திரௌபதி, மற்றும் அனுயாத்ரா உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். யேசுதாஸ், பி ஜெயச்சந்திரன், உன்னி மேனன், சுஜாதா உட்பட பல பிரபல பாடகர்கள், பிரபாகரனின் இசையமைப்பில் பாடியுள்ளனர்.

என்.பி.பிரபாகரன் கேரள சங்கீத நாடக அகாடமி விருதை பெற்றவர். திரைப்படங்கள் தவிர, பல நாடகங்கள், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் ஆல்பங்களுக்கும் என்.பி.பிரபாகரன் இசையமைத்துள்ளார். என்.பி.பிரபாகரனுக்கு உஷா குமாரி என்ற மனைவியும், ஆனந்த் பிரபு, அனிஷ் பிரபு என்ற மகன்களும் உள்ளனர். 

என்.பி.பிரபாகரன்

இந்த நிலையில், என்.பி. பிரபாகரன் திருவனந்தபுரத்தில் இருந்து கோழிக்கோடு செல்லும் ரயிலில் பயணம் செய்தார். பயணத்தின்போதே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சக பயணிகள் கூறியதையடுத்து அவரை மீட்ட ரயில்வே அதிகாரிகள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், இசையமைப்பாளர் பிரபாகரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரின் சொந்த ஊரான திருவஞ்சூருக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.. அங்கு அவரின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது திரைபிரபலங்கள், நண்பர்கள், உறவினர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டுசென்று அஞ்சலி செலுத்தினர். 

என்.பி.பிரபாகரன்

பின்னர் அவரது குடும்ப முறைபடி இறுதிச்சடங்கு நடத்தப்பட்டு என்.பி.பிரபாகரனின் உடல் தகனம் செய்யப்பட்டது. என்.பி.பிரபாகரனின் மறைவு மலையாள திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரின் மறைவுக்கு பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!


 
 

From around the web