பிரபல இசையமைப்பாளர் காலமானார்!! திரையுலகில் அதிர்ச்சி!!

விஸ்வநாதன் ராமமூர்த்தி போல் தெலுங்கில் இரட்டை இசையமைப்பாளர்கள் ராஜ், கோட்டி. இதில் ராஜ் காலமானார். பிரபல இசையமைப்பாளர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல இசையமைப்பாளர் ராஜ் நேற்று உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 68. தமிழிலும் 'ரெண்டு பொண்டாட்டி காவல்காரன்' என்ற படத்துக்கு இசையமைத்துள்ளார்.
ప్రముఖ సంగీత దర్శక ద్వయం రాజ్-కోటి లలో 'రాజ్' ఇక లేరు అని తెలవటం దిగ్భ్రాంతికి గురి చేసింది. ఎంతో ప్రతిభ వున్న రాజ్ , నా కెరీర్ తొలి దశలలో నా చిత్రాలకందించిన ఎన్నో అద్భుత ప్రజాదరణ పొందిన బాణీలు, నా చిత్రాల విజయాలలో ముఖ్య పాత్ర వహించాయి. నన్ను ప్రేక్షకులకు మరింత చేరువ… pic.twitter.com/uPifYfmtFE
— Chiranjeevi Konidela (@KChiruTweets) May 21, 2023
ராஜ் தனியாக 10க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.இசையமைப்பாளர் ராஜின் மறைவு தெலுங்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் இசையமைப்பாளர் ராஜின் மறைவுக்கு பிரபல நடிகர் சிரஞ்சீவி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது பதிவில், ராஜ் மறைந்துவிட்டார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
ராஜ் மிகத் திறமையானவர். நான் திரையுலக வாழ்வைத் தொடங்கிய காலத்தில் அற்புதமான பாடல்களைக் கொடுத்து என் படங்களின் வெற்றிக்கு வித்திட்டவர். அவரது பாடல்கள் என்னை மக்களிடையே கொண்டுசேர்த்தது. அவரது மறைவு இசையுலகுக்கு பேரிழப்பு எனத் தெரிவித்துள்ளார். அத்துடன் அவரது ரசிகர்களுக்கும் குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல் எனவும் பதிவிட்டுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!